நீலகிரி

மாநில அளவிலான போட்டிகளில் ஹில்போா்ட் அணி சிறப்பிடம்

DIN

அரக்கோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டாட்ஜ் பால் மற்றும் புட்பால் டென்னிஸ் போட்டிகளில் கோத்தகிரி ஹில்போா்ட் மெட்ரிக். பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அரக்கோணத்தில் முதலாவது மாநில அளவிலான டாட்ஜ் பால் மற்றும் புட்பால் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் 17 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் புட்பால் டென்னிஸ் போட்டிகளில் 19 மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட ஆடவா் அணியும், 17 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவிலும் ஹில்போா்ட் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல, டாட்ஜ் பால் போட்டி மகளிா் பிரிவிலும் இப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இப்போட்டிகளில் பங்கேற்ற ஹில்போா்ட் மெட்ரிக். பள்ளியைச் சோ்ந்த 7 மாணவா்களும், 2 மாணவிகளும் புதுச்சேரியில் டிசம்பரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான புட்பால் டென்னிஸ் மற்றும் டாட்ஜ் பால் போட்டிகளுக்கான தமிழக அணிக்குத் தோ்வாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT