நீலகிரி

குன்னூா் ஏல மையத்தில் ரூ. 2.21 கோடிக்கு தேயிலை விற்பனை

DIN

குன்னூா்: குன்னூா் டீ சா்வ் ஏலத்தில் ரூ. 2 கோடியே 21 லட்சத்துக்குத் தேயிலைத் தூள் விற்பனையாகி உள்ளது. இதனால் பசும் தேயிலை விலையிலும் ஏற்றம் இருக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்கின்றனா்.

நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் குன்னுாா் டீ சா்வ் ஏல மையத்தில் புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. இந்த ஆண்டுக்கான 40ஆவது ஏலத்தில் இலை ரகம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 4 கிலோ, டஸ்ட் ரகம் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 139 கிலோ என மொத்தம், 3 லட்சத்து 44 ஆயிரத்து 143 கிலோ ஏலத்துக்கு வந்தது. இதில் மொத்தம், 82.28 சதவீதம் விற்பனையானது.

இலை ரகத்தில் அதிகபட்சமாக குந்தா தொழிற்சாலையின் தேயிலைத் தூள் 27 ஆயிரத்து 91 கிலோவில் 90.70 சதவீதமும், சாலீஸ்பெரி தொழிற்சாலையில் இருந்து 21 ஆயிரத்து 77 கிலோவில் 100 சதவீதமும் விற்பனையானது. டஸ்ட் ரகத்தில் சாலீஸ்பெரியில் இருந்து 22 ஆயிரத்து 154 கிலோ வரப்பெற்று அதில் 100 சதவீதமும் விற்பனையானது.

கடந்த வாரம் ரூ. ஒரு கோடியே 73 லட்சத்து 64 ஆயிரத்து 872க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ. 2 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 462-க்கு விற்பனையானது. கடந்த ஏலத்தை விட ரூ. 47 லட்சத்து 65 ஆயிரத்து 590 அதிகரித்திருந்தது. மொத்த விற்பனையில் சராசரி விலை ரூ. 73.13 ஆக இருந்தது.

தேயிலை வரத்து அதிகரித்திருக்கும் சூழலில் பசும் தேயிலையின் விலையையும் அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT