நீலகிரி

யூகோ வங்கியில் வாராக்கடன் தீர்வு முகாம்

DIN

கூடலூர் யூகோ வங்கியில் வாராக்கடன் தீர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு யூகோ வங்கியின் துணைப் பொது மேலாளர் சி.ஏ.நாகரத்னா தலைமை வகித்து, வங்கி அறிவித்துள்ள வாராக்கடன் தீர்வு முகாமில் சலுகைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளித்தார். தொடர்ந்து நீண்டகாலமாக வாராக்கடனாக இருந்த தொகையை சலுகையை அறிவித்து வசூலித்தார். இம்முகாமில் 50 வாடிக்கையாளர்களிடமிருந்த சுமார் ரூ.65 லட்சம் ஒரே நாளில் வசூல் செய்தார்.
 தொடர்ந்து வரும் 26ஆம் தேதி வரை வாராக்கடன் வசூல் முகாம் யூகோ வங்கி கிளையில் நடைபெறும். இந்த வாய்ப்பை இப்பகுதி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள கடனை தீர்வு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
 இம்முகாமில் கூடலூர் கிளையின் முதுநிலை மேலாளர் கார்த்திக் குமார் ஷா, உதவி மேலாளர் கிரிஷ் உள்ளிட்ட அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT