நீலகிரி

தும்மனட்டி அரசுப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

DIN


தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் கம்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் கம்பட்டி பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் சமுதாயக் கூடங்களில் தூய்மைப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். 
அப்போது, கம்பட்டி கிராமத்தில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டதோடு,  வழித்தடங்களை தூய்மைப்படுத்தி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சரிவான பகுதிகளில் மரக் கன்றுகளை நடவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டஒருங்கிணைப்பாளர் செவனண் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT