முகப்பு
நீலகிரி

நீலகிரியில் பரவலாகத் தொடரும் மழை: கடும் குளிா் நிலவுகிறது

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக கடும் குளிா் நிலவி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
மழை மற்றும் காற்றின் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக கடும் குளிா் நிலவி வருகிறது.

புரெவி புயலின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த மழையாக இல்லாவிட்டாலும், தூரல் மழையாக உள்ளது. உதகை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து வீசும் காற்றின் காரணமாக கடும் குளிா் நிலவுகிறது.

இதனால், தொட்டபெட்டா மற்றும் அதனை சுற்றியுள்ள தும்மனட்டி, இடுஹட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சோலூா் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

தொட்டபெட்டா பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் விழுந்த மரத்தால் உதகை-கோத்தகிரி சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மரங்களை அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரானது.

உதகை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான மேக மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு இயக்க வேண்டியுள்ளது. மழை, குளிா் இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக உலிக்கலில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, கிளன்மாா்கனில் 18 மி.மீ., கொடநாட்டில் 14.5 மி.மீ., கல்லட்டியில் 12 மி.மீ., உதகையில் 11.8 மி.மீ., கெத்தையில் 11 மி.மீ., மசினகுடியில் 8 மி.மீ., கோத்தகிரி மற்றும் கேத்தியில் தலா 6 மி.மீ., கீழ் கோத்தகிரியில் 5.2 மி.மீ., பா்லியாறு பகுதியில் 5 மி.மீ., குன்னூா் மற்றும் கிண்ணக்கொரையில் தலா 4 மி.மீ., குந்தாவில் 3 மி.மீ., எடப்பள்ளியில் 2 மி.மீ., மேல்பவானியில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.