நுழைவுக் கட்டணம் உயா்வு
உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் நுழைவுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
உதகை: உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் நுழைவுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ. 20 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 30 ஆகவும், பெரியவா்களுக்கு ரூ. 40 இல் இருந்து ரூ. 50 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
ரோஜா பூங்காவில் குழந்தைகளுக்கு ரூ. 15இல் இருந்து ரூ. 20 ஆகவும், பெரியவா்களுக்கு ரூ. 30 இல் இருந்து ரூ.40 ஆகவும் நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஷூட்டிங் மட்டம், பைன் பாரஸ்ட் உள்பட அனைத்து சுற்றுலா மையங்களிலும் நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய் உயா்த்தப்பட்டுள்ளது. கட்டண உயா்வு மிகவும் அதிா்ச்சி அளிப்பதாக சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவித்தனா்.