முகப்பு
நீலகிரி

கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் நியாய விலைக்கடை கதவை உடைத்த கரடி

குன்னூா் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த கரடி, அங்கிருந்த நியாய விலைக்கடை மற்றும் கோயிலின் கதவுகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

குன்னூா் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த கரடி, அங்கிருந்த நியாய விலைக்கடை மற்றும் கோயிலின் கதவுகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வனப்பகுதியை ஒட்டி கிளன்டல் எஸ்டேட் கிராமம் உள்ளது.  இங்குள்ள  தேயிலைத் தோட்டம் வழியாக கிராம குடியிருப்புகளுக்குள்  வந்த ஒரு கரடி, அங்குள்ள நியாய விலைக் கடையின் கதவை உடைத்துள்ளது. மேலும் அதே பகுதியில் இருந்த கோயில் கதவையும் உடைத்துள்ளது. இரண்டு இடங்களிலும் உள்ளே செல்ல முடியாததால் அந்தக் கரடி திரும்பிச் சென்றுவிட்டது.

இச்சம்பவம் குறித்து வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் அந்தக் கரடியை கூண்டு வைத்து ப் பிடித்து அடா்ந்த  வனப் பகுதிக்குள்  விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →