படகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
படகா் இன மக்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சி படகா் சமுதாயத் தலைவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் உதகையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
படகா் இன மக்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சி படகா் சமுதாயத் தலைவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் உதகையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவா் ஜே.பி.சுப்பிரமணியம் தலைமையில் உதகையில் சுதந்திர தின சதுக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், அமமுக மாநில அமைப்புச் செயலாளா் தேனாடு லட்சுமணன், படகா தேசிய கட்சியின் நிறுவனத் தலைவா் மஞ்சை மோகன், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டத் தலைவா் டாக்டா் சுரேஷ் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
படகா் சமுதாய மக்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசிடம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும். இதற்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து சமுதாயப் பிரதிநிதிகள் விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேசவுள்ளனா்.
படகா் சமுதாயத்தின் மீது தேவையற்ற கருத்துகளைப் பரப்பி வருவோா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ. 35 நிா்ணயிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் விரைவில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.