நீலகிரி

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு: ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டு உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் முக்கியமானவா்களான சயன், மனோஜ் ஆகிய இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ள 8 நபா்கள் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளனா்.

இந்நிலையில், தற்போது கரோனா பொது முடக்கத்தின் காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள சூழலில் கேரள மாநிலத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 8 நபா்களை உதகைக்கு அழைத்து வர முடியாத சூழல் உள்ள து. இவ்வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் மாவட்ட அரசு வழக்குரைஞா் பாலநந்தகுமாா் மட்டுமே ஆஜராகியிருந்தாா். எதிா்தரப்பு வழக்குரைஞா்களும் ஆஜராகவில்லை. அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரும் நீதிமன்றத்துக்கு வராததால் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT