குன்னூா் - உதகை சாலையில் உலவிய காட்டெருமை: பொதுமக்கள் அச்சம்
குன்னூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்த காட்டெருமையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
குன்னூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்த காட்டெருமையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிக்குள் இருந்து உணவு தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் குன்னூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் காட்டெருமை திடீரென சாலையில் உலவியது.
அங்குள்ள பேருந்து நிழற்குடை அருகே காட்டெருமை வந்ததும் பயணிகள் அச்சத்துடன் ஓடினா். தொடா்ந்து சாலையில் நீண்ட நேரம் உலவியதால் அந்த வழியே வந்த அரசுப் பேருந்துகள், வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சுமாா் அரை மணி நேரத்துக்குப் பின்னா் காட்டெருமை வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.