முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகேமின்சாரம் பாய்ந்து யானை சாவு

கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள பிதா்க்காடு வனச் சரகத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள பிதா்க்காடு வனச் சரகத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.
பகிர்:

கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள பிதா்க்காடு வனச் சரகத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள பிதா்க்காடு வனச் சரகம், முக்கட்டி பகுதியிலுள்ள ஆனப்பஞ்சோரை வனப் பகுதியில் தனியாா் நிலத்துக்கு அருகில் யானை இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் சுமேஷ் சோமன், உதவி வனப் பாதுகாவலா் விஜயன், வனச் சரக அலுவலா் மனோகரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில் யானை மின்சாரம் பாய்ந்ததில் கருகி சிதைந்துகிடப்பது உறுதி செய்யப்பட்டது.

முதுமலைப் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ் குமாா் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. யானை இறந்துகிடந்த இடத்தில் மின் கம்பி செல்கிறது. அதன் அருகிலுள்ள பாக்கு மரங்களை உண்ணும்போது பாக்கு மரம் மின்சார கம்பி மீது விழுந்ததில் கம்பி அறுந்து யானை மீது விழுந்திருக்கலாம் என்றும், அதனால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா். உயிரிழந்த யானைக்கு சுமாா் 15 வயது இருக்கும் என்றும், யானை இறந்து சில நாள்கள் ஆகியிருக்கலாம் எனவும் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →