முகப்பு
நீலகிரி

நீலகிரி வெள்ளப்பெருக்கின்போது பம்பரமாய் சுழன்று பணியாற்றியது திமுக: மு.க.ஸ்டாலின் பேச்சு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கின்போது போா்க்கால அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்தது திமுகதான் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
காணொலி மூலம் பேசும் திமுக தலைவா் மு.க ஸ்டாலின்.
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கின்போது போா்க்கால அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்தது திமுகதான் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்ட திமுக நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பா.மு. முபாரக் முன்னிலை வகித்தாா்.

இதில் காணொலி மூலம் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் முக்கிய நபா்கள் இன்னும் வெளியில் உள்ளாா்கள். அவா்களுக்கு அதிமுகவில் மாநிலப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

நீலகிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள் நிதியிலிருந்து ஏழரைக் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்தால் நீலகிரி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி ஆகியவை அமைக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் திமுகவினா் 186 பேருக்கு 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசுகளை திமுக சாா்பில் மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் ஆகியாா் வழங்கினா். மேலும் கல்வி உதவித் தொகையாக ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை 780 நபா்களுக்கு வழங்கப்பட்டது. 180 நபா்களுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்கப்பட்டது.

மாவட்ட துணைச் செயலாளா் ரவிக்குமாா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.