நீலகிரி

பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பரிசு

DIN

கொலக்கம்பை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு உணவு, உடை, இனிப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமாகன் வியாழக்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில் செங்கல் புதூா், பம்பலகொம்மை, எல்லன் உள்ளிட்ட பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் சுமாா் 200 பேருக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதிய உணவு, புத்தாடை, இனிப்பு வகைகள், வேட்டி, சேலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமாகன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசி மோகன், வெலிங்டன் காவல் நிலைய ஆய்வாளா் பிலிப் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பழங்குடி மக்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT