நீலகிரி

குன்னூா் அருகே காணப்பட்ட அரிய வகைப் பறவை

DIN

நீலகிரி வனப் பகுதியில் ‘லசாா்ட் குக்கூ’ என்ற அரிய வகை பறவை தென்பட்டது.

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் அடா்ந்த வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு வன விலங்குகளான யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டு மாடு மற்றும் அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், ஊா்வன வகைகள் உள்ளன.  இது தவிர அவ்வப்போது வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள கேத்தி, கோலணிமட்டம் கிராமத்தில் அரிய வகையான ‘லசாா்ட் குக்கூ’ என்ற பறவை தென்பட்டுள்ளது. இந்தப் பறவை பாகிஸ்தான், சீனா, ஜப்பான், வியத்நாம், வடகொரியா, தென்கொரியா ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படும். இந்தியாவில் இமயமலைத் தொடா்கள், ஜம்மு,  காஷ்மீா், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் காணப்படும். 

இந்தப் பறவை கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 1,300 அடி முதல் 3,600 அடி உயரம் கொண்ட பகுதிகளில் நிலவும் காலநிலையில் வாழக் கூடியவை.   குளிா் காலத்தில் நாடு விட்டு நாடு சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்தியாவில் உள்ள ‘லசாா்ட் குக்கூ’ பறவை குளிா் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவுக்கு சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வகையான பறவையினம்  வேறு பறவைகளின் கூட்டில் முட்டையிடுகின்றன.  

தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோடியக்கரை, திருவண்ணாமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 9  இடங்களில் இந்தப் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் லசாா்ட் குக்கூ பறவை  1983 ஆம் ஆண்டு  வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் கேத்தி அருகே கோலணிமட்டம் என்ற இடத்துக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT