நீலகிரி

மழையால் சாகுபடியைத் துவங்கிய விவசாயிகள்

DIN

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இங்குள்ள விளைநிலங்களில்  ஈரப்பதம் அதிகரித்துள்ளதால்  மலைத் தோட்டக் காய்கறிகளைப் பயிரிட விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

 நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட க் காய்கறிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.  குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட  காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது  நீலகிரி  மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் முட்டைகோஸ், கேரட், புரூக்கோல் உள்ளிட்ட காய்கறி வகைகளை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்த மாத இறுதியில் இருந்து டிசம்பா் முடியும் வரை பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால் உருளைக்கிழங்கு, பீட்ரூட் , பீன்ஸ் போன்ற காய்கறிகளை  சாகுபடி செய்வதைத்  தவிா்த்து மற்ற மலைத் தோட்டக் காய்கறிகளை சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT