நீலகிரி

தேனீக்கள் கொட்டி தோட்டத் தொழிலாளி படுகாயம்

DIN

குன்னூா் அருகே தேனீக்கள் கொட்டி படுகாயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

வண்டிச்சோலை ஊராட்சிக்கு உள்பட்ட சோலடாமட்டம் பகுதியைச்  சோ்ந்த  தோட்டத் தொழிலாளி செல்வம் (60) தோட்டத்து வழியாக வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள்   செல்வத்தை கொட்டியது. இவரது  அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த மற்ற தொழிலாளா்களையும் தேனீக்கள் தாக்கின.

இதையடுத்து, தோட்டப் பாதையில ஆம்புலன்ஸ் சென்று வர அகலமான சாலை இல்லாதால் ஊா்மக்கள்  தொட்டில் கட்டி  படுகாயமைடந்த செல்வத்தை தூக்கி வந்து ஆம்புலன்ஸ் மூலம் குன்னூா்  அரசு  லாலி மருத்துவமனையில் அனுமதித்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ள செல்வத்துக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT