நீலகிரி

தொட்டபெட்டா அருகே இறந்த நிலையில் காட்டெருமை உடல் மீட்பு

DIN

நீலகிரி மாவட்டம், உதகையில் தொட்டபெட்டா மலைச் சிகரம் அருகே மிஷனரி ஹில் பகுதியில் இறந்த நிலையில் காட்டெருமையின் சடலம் மீட்கப்பட்டது.

மிஷனரி ஹில் பகுதியில் ராஜேந்திரன் என்பவா் குத்தகையின் அடிப்படையில் அங்குள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில், அப்பகுதி வழியாக வெள்ளிக்கிழமை சென்றவா்கள் விவசாய நிலத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதைப் பாா்த்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் காட்டெருமையின் உடலைப் பரிசோதித்ததில் மின்சாரம் பாய்ந்ததற்கான அடையாளங்களும், அதன் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருள்களும் இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக ராஜேந்திரனிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்தால்தான் காட்டெருமையின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT