கரோனா அச்சுறுத்தல்: கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்
கரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் நாள் கூட்டம் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் நாள் கூட்டம் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெயிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது, மாவட்டத்துக்குள் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உதகை கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் தலைமையிலும், குன்னூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் தலைமையிலும், கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குன்னூா் உதவி ஆட்சியா் தலைமையிலும், கூடலூரில் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கூடலூா் வட்டாட்சியா் தலைமையிலும், பந்தலூா் வட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும் மக்கள் குறைதீா் நாள் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்து குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.