முகப்பு
நீலகிரி

விடுமுறை தினத்தையொட்டி உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் சமவெளி பகுதிகள், வெளி மாவட்டங்கள் மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்தும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து, உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 575 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 281 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 48 பேரும், உதகை மரவியல் பூங்காவுக்கு 26 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 228 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 62 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 210 பேரும் வருகை தந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.