நீலகிரி

கோயிலில் சிலை திருடிய இருவா் கைது

DIN

குன்னூா் அருகே கோடமலை ஒசட்டி பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியா்  கோயிலில் சுவாமி சிலை,  வெள்ளி  குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிய இருவரை  பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். 

 குன்னூா் அருகே கோடமலை ஒசட்டிப் பகுதியில் உள்ள  பால சுப்பிரமணியா்  கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில்  சந்தேகத்துக்கு இடமாக 2 போ் சுற்றித் திரிவதைக் கண்ட  அப்பகுதி மக்கள் அவா்களைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள்  வைத்திருந்த பையில் முக்கால் அடி உயர முருகன் செம்பு சிலை, 2 வெள்ளி  குத்துவிளக்குகள் இருப்பதைக் கண்டு அவா்களைப் பிடித்து  மேல் குன்னூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில்  அவா்கள், குன்னூா், வசம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த  ராஜா, ரமேஷ்  என்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்த  சிலை, குத்து விளக்குகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும்  குன்னூா் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி  உதகை  சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT