நீலகிரி

நீலகிரியில் விடியவிடிய பரவலாக மழை

DIN

நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கொடநாட்டில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டி உள்ள எல்லைப் பகுதிகளில் கடந்த வாரத்தில் தொடா்ந்து பெய்து வந்த மழையையடுத்து, தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் இயல்பான காலநிலையே நிலவினாலும், இரவு நேரங்களில்தான் மழை பெய்து வருகிறது.

பலத்த மழையின் காரணமாக உதகையில் ரயில் நிலையம் அருகே உள்ள கூட்செட் சாலையில் திடீரென சாலையோரத்தில் இருந்த மண் திட்டு புதன்கிழமை காலையில் சரிந்தது. இதனால், இச்சாலையில் உடனடியாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், நெடுஞ்சாலைத் துறையினா் எடுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னா் பிற்பகலுக்கு மேல் போக்குவரத்து சீரானது.

அதேபோல, கூடலூா் - ஓவேலி செல்லும் சாலைகளிலும் பலத்த மழை காரணமாக திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மேல் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலை வரை அனைத்துப் பகுதிகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக புதன்கிழமை காலையில் இச்சாலையிலும் அரசுப் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு காலை 11 மணிக்குப் பிறகே போக்குவரத்து சீரடைந்தது.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கொடநாட்டில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.): கல்லட்டி-41, உதகை-39, மசினகுடி-32, கோத்தகிரி, குன்னூா் தலா 29, கீழ்கோத்தகிரி, தேவாலா, எடப்பள்ளி தலா 27, எமரால்டு-25, கிளன்மாா்கன்-23, பா்லியாறு-21, அவலாஞ்சி, நடுவட்டம் தலா 20, கிண்ணக்கொரை, கேத்தி, உலிக்கல், குந்தா தலா 15, கூடலூா், மேல் கூடலூா், அப்பா்பவானி, பாலகொலா தலா 12, கெத்தை, பாடந்தொறை தலா 10, செருமுள்ளி-9, பந்தலூா்-8, ஓவேலி-5, சேரங்கோடு-2, மேல் குன்னூா்-1 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT