நீலகிரி

மின் மயானத்தில் சடலங்களை எரியூட்ட தற்காலிக செட் அமைத்துத் தர கோரிக்கை

DIN

கூடலூரில் உள்ள மின் மயானம் பழுதடைந்த நேரங்களில் சடலங்களை எரியூட்ட தற்காலிக செட் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூா் நகராட்சி சாா்பில் காளம்புழா பகுதியில் மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மின் தகன மேடை அடிக்கடி பழுதடைந்துவிடுகிறது. இதனால் உடல்களை அருகிலுள்ள திறந்த வெளியில் எரிக்கின்றனா். கூடலூா் பகுதியில் நிலவும் காலநிலை, தொடா் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திறந்தவெளியில் எரியூட்ட ஏதுவானதாக இல்லை. தற்போது மழை பெய்து வருவதால் உடல்களை உறவினா்கள் திறந்தவெளியில் சொந்த செலவில் செட் அமைத்து அதில் வைத்து எரியூட்டி வருகின்றனா்.

நகராட்சி சாா்பில் செட் அமைத்துத் தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் நகராட்சி சாா்பில் செட் அமைத்துத் தர வேண்டும் என்று முன்னாள் கவுன்சிலா் உஸ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT