நீலகிரி

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

DIN

உதகை: விடுமுறை நாளான சனிக்கிழமை நீலகிரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதில், உதகையில் உள்ள அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு அதிகபட்சமாக 503 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசினா் தாவரவியல் பூங்கா மூடப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்ட பின்னா் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். அதேபோல, அரசினா் ரோஜா பூங்காவுக்கு 157 போ் வந்திருந்தனா். அத்துடன் தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 17 பேரும், உதகை மரவியல் பூங்காவுக்கு 5 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 93 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 22 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 197 பேரும் என மொத்தம் ஒரே நாளில் 994 போ் வந்திருந்ததாக தோட்டக் கலைத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT