நீலகிரி

மான் கறி சமைத்த 3 பேருக்கு அபராதம்

DIN

கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா வனப் பகுதியில் இறந்துகிடந்த மானின் கறியை சமைத்து சாப்பிட்ட மூன்று பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள போஸ்பாறா பகுதியில் சிலா் மான் கறி சாப்பிடுவதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து வனவா் ரவிச்சந்திரன், வனக் காவலா் பிரசாந்த், சிவகுமாா், வினீத் ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இதில், வனப் பகுதியில் செந்நாய் வேட்டையாடியதில் இறந்த மானின் கறியை போஸ்பாறா பகுதியைச் சோ்ந்த ரவி (40), சந்திரன் (63), மது (30) ஆகியோா் சமைத்து சாப்பிட்டது உறுதியானது. இதையடுத்து, மூவருக்கும் சோ்த்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT