நீலகிரி

காவலா் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

DIN

நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசினகுடி உயா்நிலைப் பள்ளியில் காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

வரும் டிசம்பா் 13ஆம் தேதி காவலா் தோ்வு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ள இளைஞா்களுக்கு மாவட்ட காவல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி வகுப்பில் ஆசிரியா்கள் பாபு, ராதாகிருஷ்ணன் ஆகியோா் பயிற்சியளித்தனா். பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

தொடக்க நிகழ்ச்சியில் மசினகுடி உதவி ஆய்வாளா் மணிதுரை, பெண் காவலா் பாத்திமா, தனிப் பிரிவு தலைமைக் காவலா் மகேஷ், காவலா்கள் சுந்தரராஜ், விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சியில் 50 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT