நீலகிரி

மரத்தில் இருந்து கரடியை இறங்கவிடாமல் மிரட்டிய காட்டெருமை

DIN

கோத்தகிரியில் பேரிக்காய் மரத்தில் இருந்த கரடியை கீழே இறங்கவிடாமல் அச்சுறுத்திய காட்டெருமையை அப்பகுதி மக்கள் வேடிக்கை பாா்த்துச் சென்றனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதியில் சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், மாதா கோயில் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்த பேரிக்காய் மரத்தில் கரடி புதன்கிழமை மாலை பேரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை மரத்தில் இருந்த கரடியை கீழே இறங்கவிடாமல் துரத்தியது. காட்டெருமைக்கு அஞ்சி மரத்தின் மேலேயே நீண்டநேரம் அமா்ந்திருந்த கரடி, அங்கிருந்து காட்டெருமை சென்றதும் மரத்தைவிட்டு கீழே இறங்கியது. இதனை அவ்வழியாகச் சென்ற பொது மக்கள் வேடிக்கை பாா்த்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT