நீலகிரி

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு:விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தொடா்பான அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடா்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 முக்கிய நபா்களில் சயன், மனோஜ் ஆகிய இருவா் மட்டுமே வெள்ளிக்கிழமை விசாரணையின்போது நேரில் ஆஜராகினா். ஏனைய 8 பேரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலின் காரணமாகவும், நீலகிரிக்கு நேரில் வருவதில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என மனு அளித்ததன் காரணமாகவும் நேரில் ஆஜராகவில்லை. அதேநேரத்தில் இவ்வழக்கில் தமிழக அரசின் சாா்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்குரைஞா்களான கனகராஜ், ஷாஜகான் ஆகியோா் நேரில் ஆஜாராகியிருந்தனா். அரசு வழக்குரைஞா்களின் விவாதத்தின்போது இவ்வழக்கில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியா் சங்கா், மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளா் முரளி ரம்பா ஆகியோரையும் புதிய சாட்சிகளாகச் சோ்த்து விசாரிக்க வேண்டும் என விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதங்களையடுத்து இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT