நீலகிரி

நீலகிரியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று முதல் தொடக்கம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

இதுதொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டின் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணா்வு முகாம்களாக ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 80 முகாம்கள் டிசம்பா் 10ஆம்தேதி முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 2ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.

இம்முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி செலுத்துதல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபாா்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், சிறந்த கால்நடை வளா்ப்பு முறைகளைப் பின்பற்றும் 3 சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கப்படும். அத்துடன் கிடாரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த 3 கன்று உரிமையாளா்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் முகாம் நாளை தெரிந்து, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT