நீலகிரி

கோடை சீசன்: உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணி தொடக்கம்

DIN

கோடை சீசனுக்கு தயாராகும் வகையில் உதகை அரசினா் ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

அதன்பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

உதகை அரசினா் ரோஜா பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சுமாா் 31,500 வீரிய ரக ரோஜா ஒட்டுச் செடிகளில் கவாத்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசினா் ரோஜா பூங்கா, 1995ஆம் ஆண்டு உதகை மலா்க் காட்சியின் 100ஆவது ஆண்டு நினைவாக துவங்கப்பட்டு சிறந்த முறையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரசு ரோஜா பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமாா் 31,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

2006ஆம் ஆண்டில் உலக ரோஜா சம்மேளனம் உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. தற்சமயம் அரசினா் ரோஜா பூங்கா, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக திகழ்கின்றது. இந்த ஆண்டு கோடை பருவ காலத்தை முன்னிட்டு கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலம் ரோஜா செடிகளில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்தே மலா்கள் பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT