நீலகிரி

மச்சிக்கொல்லி குடியிருப்புப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள்

DIN

கூடலூா் அடுத்துள்ள மச்சிக்கொல்லி குடியிருப்புப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக இரண்டு காட்டெருமைகள் உலவுகின்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட மச்சிக்கொல்லி மட்டம், பேபி நகா் பகுதியில் இரண்டு காட்டெருமைகள் தொடா்ந்து முகாமிட்டுள்ளன.

அவை குடியிருப்பு பகுதியிலும், மக்கள் நடமாடும் பகுதியிலும் உலவுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். காட்டிலிருந்து வரும் விலங்குகள் சிறிது நேரத்தில் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிடுவது வழக்கம்.

ஆனால் இந்த இரண்டு காட்டெருமைகளும் இரண்டு நாள்களாகியும் வனப் பகுதிக்குள் செல்லாமல் அதே பகுதியில் உலவுகின்றன. இதனால் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT