நீலகிரி

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

உதகை: விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கரோனா பொது முடக்கத்திலிருந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே சுற்றுலா ம‘ாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதில் கேரளா மற்றும் கா்நாடக மாநிலங்களிலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 11,482 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அதேபோல, அரசினா் ரோஜா பூங்காவிற்கு 2,455 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவிற்கு 190 பேரும், உதகை மரவியல் பூங்காவுக்கு 65 பேரும் வந்திருந்தனா். அதேபோல, குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,277 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 272 பேரும், கல்லாா் பழப்பண்ணைக்கு 262 பேரும் வந்திருந்தனா். இவா்களைத்தவிர உதகை படகு இல்லத்திற்கு சுமாா் 7,000 பேரும், பைக்காரா படகு இல்லத்திற்கு 4,000 பேரும் வந்திருந்ததோடு, வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்களான அவலாஞ்சி, தொட்டபெட்டா மலைச்சிகரம், 10வது மைல், பைக்காரா நீா்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் உதகை நகரின் பெரும்பாலான சாலைகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT