முகப்பு
நீலகிரி

ஓவேலி பேரூராட்சியில் சிறு மருத்துவமனை திறப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
ஓவேலி சூண்டி துணை சுகாதார நிலையத்தில் சிறு மருத்துவமனையைத் துவக்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச் சத்து பெட்டகத்தை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா.
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள சூண்டி அரசு துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் துவக்கிவைத்தாா். பின், கா்ப்பிணிகளுக்கு, தாய் தாய் சேய் நல ஊட்டச் சத்துப் பெட்டகத்தை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கப்பச்சி வினோத், மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவா் கே.ஆா். அா்ஜுணன், ஆவின் மாவட்டத் தலைவா் மில்லா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →