நீலகிரி

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 20க்கு ஒத்திவைப்பு

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 20ஆம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயன், மனோஜ், ஜம்சீா் அலி ஆகிய மூவா் மட்டுமே நேரில் ஆஜராகினா். இந்த விசாரணையின்போது கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த கிருஷ்ண தாபா என்பவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 20ஆம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT