நீலகிரி

நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவா் பொறுப்பேற்பு

DIN

நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவராக கே.ஆா்.அா்ஜுணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவா் பதவியிடம் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் இப்பதவிக்கு மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், நீலகிரி மாவட்ட அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலருமான கே.அா்ஜுணன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். துணைத்தலைவராக முருகன் பொறுப்பேற்றாா். இக்குழுவில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மற்றும் வேளாண் விற்பனைக்குழு செயலா் சரஸ்வதி உள்ளிட்ட 12 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலா் வினோத், குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, ஆவின் பெருந்தலைவா் மில்லா், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க தலைவா் ஹால்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT