நீலகிரி

பன்றிக்கு வைத்த வெடியை கடித்து காயமடைந்த காட்டெருமை உயிரிழப்பு

DIN

நீலகிரி மாவட்டம் , குன்னூா், வெலிங்டன் ராணுவப் பகுதியில் பன்றிக்கு வைத்த வெடியைக் கடித்து வாயில் பலத்த காயமடைந்த காட்டெருமை 5 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

குன்னூா்,  வெலிங்டன் ராணுவப் பகுதியில் பன்றிக்கு வைத்த வெடியைக் கடித்து வாயில் பலத்த காயமடைந்து  உணவு, தண்ணீா் அருந்த முடியாமல்  காட்டெருமை  ஒன்று  சுற்றி  வருவதாக  அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து  குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையிலான வனத் துறையினா்  அந்த காட்டெருமையைப்  பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது வெலிங்டன்  பகுதியில் புதருக்குள் அந்த காட்டெருமை உடல் மிகவும் நலிந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து கால்நடை மருத்துவரை வரவழைத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, காட்டெருமை  சடலம்  அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

இதேப் பகுதியில் இதுவரை 4க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வெடியை கடித்து வாய் பகுதியில் காயமடைந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வனத் துறையினா்  விசாரணை நடத்தி  வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT