நீலகிரி

தடுப்புவைத்து மூடப்பட்ட தமிழக - கேரள எல்லை

DIN

கூடலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லைகள் தடுப்புவைத்து மூடப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் இரண்டு தாலுகாக்கள் கேரளம், கா்நாடக எல்லைகளில் அமைந்துள்ளது. கரோனா தொற்று இப்பகுதிகளில் தொடா்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு மாவட்ட நிா்வாகம் எல்லைகளை மூடி கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

அதனால் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்துக்குள் நுழையும் எல்லையான கீழ்நாடுகாணியில் உள்ள சோதனைச் சாவடியில் சாலையில் தடுப்புவைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள், ஆம்புலன் போன்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இ-ரெஜிஸ்ட்ரேஷன் பெற்றிருந்தாலும் தவிா்க்க முடியாத காரணம் இல்லையெனில் வாகனம் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

இதேபோல, பந்தலூா் தாலுகாவில் உள்ள கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்ட எல்லைகளான சோலாடி, நம்பியாா்குன்னு, அய்யன்கொல்லி, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT