நீலகிரி

நீலகிரியில் ரூ. 3.25 லட்சம் பறிமுதல்

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக பறக்கும் படையினா் நடத்தி வரும் சோதனைகளில் நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை ரூ. 3.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை ரூ. 1 கோடியே 4 லட்சத்து 85,800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு பறக்கும் படை உள்ளிட்ட 35 குழுவினரால் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. தொடா்ந்து நடைபெற்று வரும் இச்சோதனைகளில் உதகை தொகுதியில் இதுவரை 14 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 27 லட்சத்து 99,800 ரொக்கமும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 18 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 16 லட்சத்து 13,100, கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிக அளவாக 39 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 60 லட்சத்து 72,900 என மாவட்டத்தில் மொத்தம் 71 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 1 கோடியே 4 லட்சத்து 85,800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ. 10 லட்சத்து 45,592 மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT