நீலகிரி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே சுற்றிய இருவா் மீது வழக்குப் பதிவு

DIN

கரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விதிகளை மீறி வெளியே சுற்றியதாக இருவா் மீது கொலக்கம்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம், மேலூா் கிராமம் கரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் யாரும் வீடுகளைவிட்டு வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இக்கிராமத்தில் மகாலிங்கம் காலனி பகுதியைச் சோ்ந்த ரவிசந்திரன் மகன் சுதா்சன் (26), பி.சி. காலனி பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் தங்கவேலு (45) ஆகியோா் விதிகளை மீறி வெளியே சுற்றித் திரிவதாக கொலக்கம்பை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினா் அவா்கள் இருவரையும் சனிக்கிழமை கைது செய்ததோடு இருவா் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT