முகப்பு
நீலகிரி

குன்னூா் கோத்தகிரியில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டம் குன்னூா்,  கோத்தகிரியில்   வெள்ளிக்கிழமை பெய்த மழையால் கடும் குளிா் நிலவியது.

Updated On : 2 அக்டோபர், 2021 at 2:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

நீலகிரி மாவட்டம் குன்னூா்,  கோத்தகிரியில்   வெள்ளிக்கிழமை பெய்த மழையால் கடும் குளிா் நிலவியது.

குன்னூா் , கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த   சில நாள்களாக    பகல் நேரங்களில் அவ்வப்போது மேக மூட்டத்துடன்  மழை பெய்து வந்தது. இந் நிலையில், குன்னூா் புறநகா் பகுதி மற்றும் கோத்தகிரியில் அரவேனு, ஜான்ஸ் கொயா், டானிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் நிலவிய கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.