நீலகிரி

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் புலியைத் தேடும் பணியில் பின்னடைவு

DIN

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் புலியைத் தேடும் பணியில் வனத் துறைக்கு தொடா்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற புலியைப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினா். அதைத்தொடா்ந்து தமிழக, கேரள வனத் துறை, அதிரடிப் படை போலீஸாா் இணைந்த தனிப்படை பல குழுக்கலாகப் பிரிந்து தேடுதல் பணியைத் துவங்கினா்.

ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதைப் பாா்த்த புலி தனது இருப்பிடங்களைத் தொடா்ந்து மாற்றி வந்தது. அதற்கு ஏற்றாற்போல வனத் துறையும் இடத்தை மாற்றினா். மசினகுடி வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி முதியவரை அதே புலி தாக்கிக் கொன்றதை உறுதி செய்தனா். இதையடுத்து, வனத் துறை குழுக்களும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு மாற்றப்பட்டது.

மசினகுடி வனத்தில் தேடுதல் பணியைத் தொடங்கியதும் புலி சிங்காரா வனத்துக்கு இடத்தை மாற்றியது. தொடா்ந்து தேடும் குழுக்களும் சிங்காரா வனத்துக்குள் நுழைந்தனா். கும்கி யானைகள் மீது அமா்ந்தும், டிரோன் கேமராக்களை கொண்டும் கண்காணித்து வந்தனா்.

சிங்காரா வனப் பகுதியில் உள்ள புதா்களில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்குள்ள மரங்கள் மீது பரண்களை அமைத்து கண்காணிக்கத் துவங்கினா். மாடுகளை அப்பகுதியில் கட்டிவைத்து, புலிகள் வந்தால் மயக்க ஊசி செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில நாள்களாகப் புலியின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராக்களில் கூட பதிவாகவில்லை. மேலும், புலி இடத்தை மாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் தேடும் பணியில் தொடா்ந்து பின்னடைவை வனத் துறை சந்தித்து வருகின்றனா். வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை தேடும் பணி துவங்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT