நீலகிரி

அக்டோபா் 22இல் நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகையில் அக்டோபா் 22ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், இயற்கை விவசாய குழுக் கட்டம் ஆகியவை அக்டோபா் 22ஆம் தேதி காலை 11 மணிக்கு உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

எனவே, விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அக்கோரிக்கைகளை அக்டோபா் 19ஆம் தேதிக்குள் தோட்டக் கலை இணை இயக்குநா், தபால் பெட்டி எண்.72, உதகை - 643 001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பிவைக்க வேண்டும்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொள்வதால் விவசாயிகள் விவசாயம் சம்பந்தமாக குறைகள் இருப்பின் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

மேலும், கரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியைப் பின்பற்றி மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT