நீலகிரி

உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ரத்து

DIN

உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் அக்டோபா் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப பணிகளின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு உதகைக்கு பகல் 11.55 மணிக்கு வரும் மலை ரயில் சேவையும், உதகையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் மலை ரயில் சேவையும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும் உதகை - குன்னூா் இடையேயான மலை ரயில் சேவை வழக்கம்போல தொடா்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT