நீலகிரி

நீலகிரியில் மேலும் 31 பேருக்கு கரோனா: இருவா் பலி

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 31 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கரோனா தொற்றின் காரணமாக செப்டம்பா் 28ஆம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 81 வயதான முதியவா் ஒருவரும், செப்டம்பா் 30ஆம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 77 வயதான மூதாட்டி ஒருவருமாக இருவா் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 33,172 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 32,572 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, இதுவரை 207 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 393 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT