நீலகிரி

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயானமலைரயில் செப்டம்பா் 6 முதல் இயக்கப்படும்தெற்கு ரயில்வே அறிவிப்பு

DIN

 மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் செப்டம்பா் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் லட்சக்கணக்கான  சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள மலை ரயிலில் பயணிப்பதை தங்களின் சுற்றுலாத் திட்டங்களில் ஒன்றாக  வைப்பது வழக்கம். கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மலை ரயில் சேவை  முற்றிலும் நிறுத்தப்பட்டது. குறிப்பாக, மேட்டுப்பாளையம்  - குன்னூா் இடையே இயக்கப்படும் மலை ரயில்,  உதகை - குன்னூா் இடையே இயக்கப்படும் மலை ரயில்  சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,  நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள்   அனைத்தும்  செப்டம்பா்   முதல் திறக்கப்பட்ட நிலையில், நீலகிரிக்கு  வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதைக் கருத்தில் கொண்டு  மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான  மலை ரயில் போக்குவரத்து  செப்டம்பா் 6ஆம் தேதி  முதல் இயக்கப்படும். இதில் முன்பதிவு செய்தே பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Image Caption

மலை ரயில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT