நீலகிரி

கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகள் கவனத்துக்கு...

DIN

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் மாவு பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டால் உடனே தகவல் தரவேண்டும் என்று தோட்டக் கலைத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் கூடலூா் வட்டாரத்தில் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளின் வயல்களில் கள ஆய்வு மேற்கொண்டதில் தற்போது மாவுப்பூச்சி தாக்குதல் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டால் உடனே கூடலூரிலுள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், உதகையிலுள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவுரைப்படி 2 சதவீதம் வேப்பெண்ணெய் கரைசலை 15 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT