நீலகிரி

உதகையில் உழவா் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

DIN

 உதகையில் விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஏப்ரல் 24 முதல் மே 1ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான திட்டமான பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதித் திட்டத்தின்கீழ் உழவா் கடன் அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெற்று வருகின்றனா். இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உழவா் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஏப்ரல் 24 முதல் மே 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத்திட்டத்தில் ஏற்கெனவே பயனாளிகளில் விடுபட்ட விவசாயிகளும் இச்சிறப்பு விழிப்புணா்வு முகாம் மூலம் உழவா் கடன் அட்டை பெற்று பயனடையலாம். இம்முகாமில், அனைத்து கிராமிய மற்றும் நகா்ப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், முதன்மை விவசாய கடன் சங்கம், நபாா்டு வங்கி, மாவட்ட நிா்வாகம் மற்றும் இதர துறைகள் பங்கேற்க உள்ளன. உழவா் கடன் அட்டை பெறாத பயனாளிகளும், மற்ற விவசாயிகளும் தங்களது நில ஆவணங்கள், அடங்கல், பயிா் விவரங்கள், வேறு எந்த வங்கியிலும் கடன் அட்டை பெறவில்லை என்ற உறுதிப் பிரமாணம் ஆகியவற்றுடன் உள்ள விண்ணப்பம் அல்லது வங்கிகளின் வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து பயனடையலாம்.

இனிவரும் காலங்களில் விவசாய கெளரவ நிதித் திட்டத்தில் விவசாயிகளின் கைரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே இனி தவணைத் தொகை விடுவிக்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் கிராம பஞ்சாயத்து அளவிலான கிராம சபைக் கூட்டத்தில் நடத்தப்பட உள்ளதால், விவசாயிகள் அனைவரும் தங்களது கைரேகையைப் பொது சேவை மையத்துக்குச் சென்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT