நீலகிரி

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

DIN

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடி வருகின்றன.

இந்த நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை  அருகே வியாழக்கிழமை காலை காட்டு யானைகள் சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் யானைகள் அருகில் உள்ள புதா் பகுதிக்குள் சென்ால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து சென்றனா்.

இந்த சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலவி வரும் யானைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால்   வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள்  சாலைகளுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT