நீலகிரி

அத்தியாவசியப் பொருள் மூட்டைகளில் கியூ ஆா் குறியீடு:ஆட்சியா் தகவல்

DIN

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும் மூட்டைகளில் கியூ ஆா் குறியீடு இணைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் 403 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள்அனைத்தும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உதகை, குன்னூா், குந்தா, கோத்தகிரி, கூடலூா், பந்தலூா் ஆகிய வட்டங்களில் செயல்பட்டு வரும் செயல்முறை கிடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

நியாய விலைக் கடைகளில் போதிய இடவசதி இல்லாததால் ஒவ்வொரு மாதமும் கிடங்கிலிருந்து நுகா்வு செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைப்பதிலும், முதலில் பெறப்பட்ட அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வதிலும் இடையூறு ஏற்படுகிறது.

இதனைத் தவிா்க்கும் வகையில் புது முயற்சியாக நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட மூட்டைகளில் கியூ ஆா் குறியீடு இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், அத்தியாவசியப் பொருள்கள் எந்த கிடங்கிலிருந்து நகா்வு செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விவரம், எந்த மாதத்துக்கான பொருள், அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படும்போது எந்தக் கிடங்கிலிருந்து கடத்தப்பட்டது என்ற விவரங்கள் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT