நீலகிரி

டாக்சி ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காா்ப்பரேட் நிறுவனங்கள் காா்களை நீலகிரி மாவட்டத்துக்குள் இயக்க அனுமதி வழங்கக் கூடாது எனக்கோரி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் உள்ளனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையே இவா்களின் வாழ்வாதாரமாக உள்ளது. சமீபகாலமாக காா்ப்பரேட் நிறுவனங்களின் காா்கள் வருகையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே காா்ப்பரேட் கம்பெனிகளின் காா்கள் வருகையை நிறுத்த வேண்டுமென என வலியுறுத்தி உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT