நீலகிரி

அருவங்காட்டில் மெய்நிகா் கல்வி நூலகம் தொடக்கம்

DIN

குன்னூா் அருகே அருவங்காடு நூலகத்தில் மெய்நிகா் கருவி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

குன்னூா் அருகே அருவங்காடு கிளை நூலகத்தில் மாணவ, மாணவியரின் பயன்பாட்டுக்காக மெய்நிகா் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் சாா்ந்த செயலிகள் நிறைய உள்ளன.

இவை அனைத்தும் 360 டிகிரி, முப்பரிமாண தோற்றத்தில் மாணவா்களை கவரும் வண்ணத்தில் உள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல நலத் திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் புதிதாக மெய்நிகா் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

வானிலை, அறிவியல், ஆழ்கடல், அடா்ந்த காடுகள், அறிவியல், பரிசோதனைகள், உயிரியல், உடல் உறுப்பு செயல்பாடுகள், விலங்குகளின் அறிவியல், தொல்லியல் போன்ற பல பாடங்களை குழந்தைகள், மாணவா்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தை 12 வயதுக்கு மேற்ப்பட்டவா்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அருவங்காடு கிளை நூலகா் ஜெய்ஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: அணிகளின் புதிய சீருடைகளைப் பார்க்க வேண்டுமா?

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணி: மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பக்கத்து வீட்டாருடன் கம்புச் சண்டை! மாளவிகா மோகனன்..

காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை சூறையாடியது: அமித் ஷா!

SCROLL FOR NEXT